News
குட்டி பாப்பா எல்லாம் தோத்துடும்.. குட்டை பாவாடையில் குனிய வைத்த பூஜா ஹெக்தே!..
Pooja Hegde: தமிழ் சினிமாவில் எப்பொழுதும் புதுமுக நடிகைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சமீப காலங்களாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருபவர் தான் பூஜா ஹெக்டெ. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
மேலும் பூஜா ஹெக்டெ மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பல மொழிகள் பேசும் பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டெ கர்நாடகாவில் “துளு” என்ற மொழியை பேசக்கூடியவர். இருந்தபோதிலும்பூஜா ஹெக்டெ ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மொழிகளை சரளமாக பேசுவார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை மும்பையில் உள்ள எம் எம் கே கல்லூரியில் படித்தார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா”போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்ததை தொடர்ந்து, அதே ஆண்டு நடிகர் ஜீவா நடிக்கும் முகமூடி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
புதுமுக ஹீரோயின் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. மேலும் முகமூடியை தொடர்ந்து “ஒக்க லைலா கோசம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு துறையிலும் அறிமுகமானார்.

தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகம் வரவே, தமிழில் இருந்து காணாமல் போன பூஜா ஹெக்டே ஹிந்தியில் மொகஞ்சதாரோ என்ற ஹிந்தி படத்தின் மூலம் ஹிந்தி உலகில் பிரபலமானார். ஹிந்தியில் தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே தற்பொழுது இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளதை தொடர்ந்து அங்கு எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் குட்டை பாவாடை போட்டுக்கொண்டு அழகாக கையில் ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டுள்ள போட்டோவை தனது ரசிகர்களுக்காக அவர் இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதைப் பார்த்த அவர் ரசிகர்கள் கமெண்ட் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.
