News
என்ன அந்த மாதிரி பண்ணுனார்.. பிரபுதேவாவால் கதறி அழுத இரண்டு நடிகைகள்..!
தமிழில் உள்ள டான்ஸ் மாஸ்டர்களில் அதிகமாக மக்களால் அறியப்படும் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபுதேவா ஒரு சில காலங்களிலேயே நடிகராக நடிக்க துவங்கினார்.
நடிக்க துவங்கினாலும் கூட அதே சமயம் டான்ஸ் மாஸ்டராகவும் தனது வேலையை சிறப்பாக செய்து வந்தார் பிரபுதேவா. இப்போது வரை அவர் நிறைய திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். அதே சமயம் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் பிரபு தேவாவிடம் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால் ஒரு சிறப்பான நடனத்தை எப்படியாவது நடனம் ஆடுபவர்களிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று நினைப்பார். அவர்களுக்கு நடனம் ஆடவே வரவில்லை என்றாலும் கூட அவர்களை டார்ச்சர் செய்தாவது அந்த நடனத்தை வாங்காமல் விடமாட்டார்கள் பிரபுதேவா என்ற ஒரு பேச்சு உண்டு.
பிரபு தேவா நடனம்:
அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்காக ஆடும் பொழுது ஒரு கடினமான ஸ்டெப்பை பிரபுதேவா ஆடுமாறு கூறினார்.
அதை நான் இரவு முழுவதும் பிராக்டிஸ் செய்துவிட்டு மறுநாள் ஆட வந்தேன் அப்பொழுது அவர் ஸ்டெப்பை மாற்றிவிட்டார் இதனால் நான் கண்ணீர் விட்டு அங்கேயே அழ துவங்கி விட்டேன் என்று கூறியிருந்தார். அதேபோல நடிகை மீனா ஒரு மேடையில் பேசும்பொழுது எனக்கு பிரபுதேவாவை விட அவரது அண்ணனை தான் மிகவும் பிடிக்கும்.
ஏனெனில் நமக்கு என்ன டான்ஸ் வரும் என தெரிந்து அவர் அதற்கு தகுந்தாற் போல நடன நடனத்தை வைப்பார். ஆனால் பிரபுதேவாவை பொருத்தவரை அவர் என்ன டான்ஸ் ஆடுகிறாரோ அதையே நாமும் ஆட வேண்டும் என்று கூறுவார் நம் கண்ணீர் விட்டு அழுதாலும் நம்மை விட மாட்டார் என்று கூறியிருக்கிறார் இப்படி நடிகைகளை கண்ணீர் விட்டு அழ வைத்த டான்ஸ் மாஸ்டராக பிரபு தேவா இருக்கிறார்.
