TV Shows
இதுக்கு செருப்புதான் பதில்.. குக் வித் கோமாளி விவகாரத்தில் பதில் கொடுத்த மாகாபா..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனையில் மணிமேகலை முதன்முதலாக வி.ஜே பிரியங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் மணிமேகலைக்கு ஆதரவாக விஜய் டிவியை சேர்ந்த எந்த ஒரு பிரபலமும் இதுவரை எந்த பதிவும் போடவில்லை.
ஏனெனில் விஜய் டிவியில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் அதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர்.
மணிமேகலை குறித்து மாகாபா:
இந்த நிலையில் அவர்களை கலாய்க்கும் விதத்தில் மாகாபா சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிமேகலை சனிக்கிழமையில் தான் இந்த பதிவை போட்டிருந்தார். எனவே மா கா பா அதற்கு பதில் அளிக்கும் வகையில் சனிக்கிழமை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக என்னிடம் எந்த பதிவும் இல்லை.
வீட்டில் செருப்பு மட்டும் தான் இருக்கிறது என்று கூறி செருப்பை போட்டோ எடுத்து போட்டு இருக்கிறார். இதனை பார்த்து டிஜே பிளாக்கும் அவரது வீட்டில் இருக்கும் செருப்புகளை போட்டோ எடுத்து போட்டு இருவரும் சேர்ந்து மணிமேகலையை கலாய்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் மணிமேகலைக்கு செருப்பை இப்படி பதிலாக கொடுத்திருக்கின்றனரே என்று கூறி இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.