இந்தியாவிலேயே முதல் முறையாக அப்படி படமெடுப்பவது பிரபு சாலமன் மட்டும்தான்!.. இதான் விஷயமா?..

Director Prabhu Soloman: உலகம் முழுக்க திரைத்துறையில் அனைத்து வகையான திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சில வகை படங்களை மட்டுமே மக்கள் அதிகமாக பார்த்து ஹிட் கொடுக்கும் நிலை உண்டாகியுள்ளது.

30 வருடங்களுக்கு முன்பு கூட குடும்ப படங்கள் காதல் படங்களுக்கு எல்லாம் ஓரளவு வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சண்டை படங்களுக்கு மட்டுமே அதிக வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு நடுவே தொடர்ந்து இயற்கை சார்ந்த திரைப்படங்களை எடுப்பவராக இயக்குனர் பிரபு சாலமன் இருக்கிறார்.

பிரபு சாலமனின் திரைப்படங்கள் அதிகப்பட்சம் மலை மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளை காட்டும் விதமாகதான் இருக்கும். அந்த வகையில் கும்கி யானைகளை மையப்படுத்தி கும்கி என்கிற திரைப்படத்தை எடுத்தார் பிரபு சாலமன்.

Social Media Bar

அதன் பிறகு காடு தொடர்பான மற்றொரு படமாக காடன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். தற்சமயம் பிரபு சாலமன் அடுத்ததாக சிங்கத்தை பற்றி ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நிஜ சிங்கங்களை படம் பிடிப்பதில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் மொரிசியஸ் சென்று அங்கு படப்பிடிப்பை துவங்க உள்ளார் பிரபு சாலமன்.

இந்தியாவிலேயே இதுவரை சிங்கத்தின் வாழ்க்கையை பேசும் வகையில் திரைப்படம் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. எனவே பிரபு சாலமனின் இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.