Cinema History
200 ரூபாய்க்கெல்லாம் வாய்பில்லை ராஜா!.. ஊழியர்களிடம் கஞ்சத்தனம் காட்டிய சிவாஜி கணேசன்!.. ஓப்பனாக போட்டுடைத்த நடிகர் பிரபு!.
Actor Prabhu : தமிழ் சினிமாவில் நடிப்பில் ஒரு மிக சிறந்த பிரபலம் என்றால் அது சிவாஜி கணேசன் மட்டும்தான். சிவாஜி கணேசனுக்கு நிகராக இன்னொரு நடிகரை பேசி யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் தெரியும் சிவாஜிக்கு இணையான ஒரு நடிப்பை இன்னொரு நடிகரால் வெளிப்படுத்த முடியாது என்பது,
சினிமாவில் அப்படி போற்றப்படுகிற ஒரு நபராக சிவாஜி கணேசன் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில அவரைக் குறித்து சில வதந்திகள் உண்டு. அவற்றை உண்மையாக்கும் விதத்தில் பிரபு ஒரு சம்பவத்தை ஒரு பேட்டியில் விளக்கி இருக்கிறார்.
அதாவது சிவாஜி யாருக்குமே காசு கொடுக்க மாட்டார் என்று ஒரு பேச்சு பரவலாக உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் பிரபு ஒரு சம்பவத்தை கூறியிருந்தார். பிரபு ரயிலில் பயணம் செய்யும் பொழுது அவருக்கு மெத்தையை விரித்து விட ரயிலில் ஊழியர்கள் வருவார்கள் அந்த ஊழியர்களுக்கு பிரபு எப்போதும் 200 ரூபாய் பணம் கொடுப்பாராம்.

அதுவே சிவாஜிகணேசன் அது மாதிரி ரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த ஊழியர்களுக்கு 20 ரூபாய் தான் கொடுப்பாராம். இந்த நிலையில் ஏன் சிவாஜி கணேசன் இவ்வளவு குறைவாக கொடுக்கிறார் என்று யோசித்த அந்த ஊழியர்கள் ஒருமுறை நேரடியாகவே கேட்டுவிட்டார்கள், பிரபு சார் எப்போது இதில் பயணம் செய்தாலும் எங்களுக்கு 200 தருவார் ஆனால் நீங்கள் 20 ரூபாய் தான் தருகிறீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அதற்கு ஆச்சரியத்துடன் சிவாஜி பிரபு 200 ரூபாய் தருகிறானா என்று கூறியதோடு இல்லாமல் என்ன செய்வது பிரபுவின் தந்தை பெரிய பணக்காரர். ஆனால் என்னுடைய தந்தை ஒரு ஏழையாயிற்றே அதனால் காசின் அருமை எனக்கு தெரிந்து செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சிவாஜி. இந்த விஷயத்தை பிரபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
