Connect with us

என்ன அடிச்சி சாவடிச்சிட்டு வேணா என் இடத்தை எடுத்துக்கோங்க!.. போட்டியாளர்களுக்கு ஓப்பன் சேலஞ்ச் வைத்த பிரதீப்!..

pradeep bigboss

Bigg Boss Tamil

என்ன அடிச்சி சாவடிச்சிட்டு வேணா என் இடத்தை எடுத்துக்கோங்க!.. போட்டியாளர்களுக்கு ஓப்பன் சேலஞ்ச் வைத்த பிரதீப்!..

Social Media Bar

Bigg boss Pradeep: தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது பிக் பாஸ் தொடர். ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் தொடர் துவங்கிய பிறகு அந்த 100 நாட்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக செல்லும்.

இந்த முறையும் அதேபோல சென்று கொண்டுள்ளது இன்னும் இரு நாட்களில் கூடுதலாக 5 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் சேர்க்கப்பட உள்ளனர். அதனால் இன்னும் இந்த நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் வரை மக்கள் மத்தியில் அதிகமான பிரபலமாகி வரும் போட்டியாளராக பிரதீப் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் ஒன்றில் இருந்து எத்தனை போட்டியாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்கள் வைக்கப்பட்டன.

அதில் ஒன்றாவது என்னை பிடிப்பதுதான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். அதில் பிரதீப் முதல் இடத்தை பிடித்துக் கொண்டார் அவரிடம் பேசி அதை மற்றவர் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மற்றவர்கள் எவ்வளவோ பேசியும் கேட்காத பிரதீப் என் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எனக்கு இது தேவை. உங்களுக்கு இந்த முதலிடம் வேண்டுமென்றால் என்னை சாகடித்து எடுத்துக்கோங்க என்று ரொம்பவும் சீரியஸாக பேசிவிட்டார் பிரதீப்.

பொதுவாக பிரதீப் அவ்வளவு சீரியஸாக பேசக்கூடியவர் இல்லை என்றாலும் இந்த முறை மிகவும் எமோஷன் ஆகி உள்ளார்.

To Top