Movie Reviews
சிவகார்த்திகேயனை ஓரம் தள்ளிய பிரதீப்… ஸ்கோர் செய்யும் டிராகன். பட விமர்சனம்!..
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தில் அனுபாமா மற்றும் கயடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். மேலும் கே.எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், வி.ஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் கதை குறித்து ஏற்கனவே கலவையான விமர்சனங்கள் இருந்து வந்தன லவ் டுடே திரைப்படத்திலேயே நிறைய அபத்தமான விஷயங்கள் இருந்தன. அதே போலவே கல்லூரியில் மாஸ் காட்டுவதுதான் கெத்து என்று இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கதை களமாக இது இருக்கலாம் என பேச்சு இருந்து வந்தது.
ஆனால் ஒரு நல்ல கதைகளத்தை கொண்டுள்ளது டிராகன் திரைப்படம். படத்தின் கதைப்படி பிரதீப் ரங்கநாதன் பள்ளியில் டாப் ரேங்க் வாங்கும் ஒழுக்கமான மாணவனாக இருந்து வருகிறார். அந்த சமயத்தில் அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் நல்ல பையனை பிடிக்காது என கூறி அவரை நிராகரிக்கிறார்.
இதனால் கோபமடைந்த பிரதீப் கல்லூரியில் முழுக்க முழுக்க ரவுடித்தனம் செய்துக்கொண்டு சுற்றுகிறார். இதனால் காதல் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் கல்லூரி முடித்த பிறகு வேலை மட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர் என காதலியும் பிரதீப்பை விட்டு செல்கிறார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் ஜெயிக்க பிரதீப் செய்யும் விஷயங்கள்தான் படமாக இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை பொறுத்தவரை அதில் ஊதாரியாக சுற்றுவது மாஸ் கிடையாது. நன்றாக படிப்பதுதான் மாஸ் என்பதைதான் கதை விளக்குகிறது. அந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை கருத்தியல் ரீதியாக ஓரம் தள்ளியுள்ளது டிராகன்.
அதே மாதிரி ஒரு விஷயத்துக்காக தவறு செய்கிறேன் என இறங்கினால் பிறகு தவறு மட்டுமே செய்யும் சூழ்நிலைகள்தான் ஏற்படும் என்பதை படம் விளக்குகிறது. ஓ மை கடவுளே திரைப்படம் போலவே இந்த படமும் அஸ்வத் மாரிமுத்துக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
