Tamil Cinema News
எஸ்.கே அளவுக்கு பிரதீப் கஷ்டப்படல.! அந்த அளவுக்கு அவர் பேசியிருக்க வேண்டாம்.. சர்ச்சையை கிளப்பிய பிரதீப் பேச்சு.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் தமிழில் முதன் முதலாக கோமாளி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது.
ஆனால் அவருக்கு கதாநாயகனாக முதல் படமாக அமைந்த திரைப்படம் லவ் டுடே. லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்த திரைப்படமாகும். தற்போதைய தலைமுறையினரின் காதலில் உள்ள பிரச்சனைகளை அந்த படம் பேசியது.
அதனை தொடர்ந்து அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அடுத்து கதாநாயகனாக வரிசையாக வாய்ப்பை பெற்று அவர் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த டிராகன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன் தனக்கு நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். சினிமா துறையில் தனக்கு பிரச்சனைகள் வருவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் அந்தணன் பேசியுள்ளார். அவர் கூறும்போது சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த போது அனுபவித்த கஷ்டங்கள் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் அனுபவிக்கவில்லை. அவர் இப்போது பிரபலமான நடிகராக இருக்கிறார்.
அதனால் அவர் தங்களுடைய படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் நினைத்திருப்பார்கள். அதற்காகதான் அவர்கள் தொல்லை செய்திருப்பார்கள். அதனை போய் ஒரு பெரிய விஷயமாக பிரதீப் சொல்லியிருக்க தேவையில்லை என அந்தணன் கூறியுள்ளார்.
