News
ட்ரெஸ் போடாம அதை பண்ணுவீங்களா.. தொகுப்பாளரிடம் சர்ச்சை கேள்வி கேட்ட ஸ்டார் பட நடிகை!..
தற்போது சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி வரும் வேலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பெண்களும் தற்போது மாடலிங் துறையை தேர்வு செய்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல தமிழ் பெண்களும் சினிமாவில் சாதிக்க தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்.
இவர் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசி இருக்கும் கருத்து ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
நடிகை ப்ரீத்தி முகுந்தன்
ப்ரீத்தி முகுந்தன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். திருச்சியில் உள்ள என்ஐடி யில் படித்தவர். திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்பனிகேஷன் இன்ஜினியரிங் பி டெக் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் இந்தாண்டு 2024 ஆம் ஆண்டு வெளிவந்த “ஓம் பீம் புஷ்” என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தன் பயணத்தை தொடங்கினார்.
ப்ரீத்தி முகுந்தனின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். ப்ரீத்தி முகுந்தன் ஏராளமான தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து திரைப்படத்துறையில் பிரபலமானார். மேலும் கல்லூரி பருவத்தில் இருந்தே மாடலிங் துறையை தேர்வு செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இவரின் முதல் இசை ஆல்பமான “முத்து மி2” வெளியிட்டு யூடியூப்பில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றார். இதன் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை எடுத்தார்.
இதனால் இவருக்கு ஓம் பீம் புஷ் என்று என்ற திரைப்படத்தில் டோலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் கவின் உடன் ஸ்டார் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக ப்ரீத்தி முகுந்தன் இருக்கும் வேளையில் பல பேட்டிகளிலும் பேசி வருகிறார்.
தொகுப்பாளரிடம் சர்ச்சையாக கேள்வி கேட்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன்
பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ப்ரீத்தி முகுந்தனிடம், தொகுப்பாளர் மேக்கப் இல்லாமல் படம் முழுவதும் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா என கேள்வி கேட்டார். அதற்கு ப்ரீத்தி முகுந்தன் பேண்ட், சர்ட் இல்லாமல் உங்களால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்னால் வழங்குவீர்களா என சர்ச்சையாக கேள்வி கேட்டார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
