இந்த ரூல்ஸுக்கெல்லாம் ஓ.கேன்னா கேப்டனை உங்க படத்துல காட்டிக்கலாம்!.. கோட் படத்தில் பிரேமலதா போட்ட கண்டிஷன்!.

தற்சமயம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் கோட் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் விஜய் வெகு காலங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தையும் கொண்டு வருவதற்கு வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார்.

விஜய்யின் முதல் படம் தோல்வியடைந்தப்போது அவருக்கு இரண்டாவதாக தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால் விஜய் வளர்ந்த பிறகு விஜயகாந்தை தனது திரைப்படத்தில் சேர்த்துக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு மட்டும் எதற்கு ஏ.ஐ தொழில்நுட்பம் எல்லாம் பயன்படுத்தி அவரை கொண்டு வருகின்றனர் என கேள்விகள் எழுகின்றன.

ஆனால் இதுக்குறித்து பிரேமலதா பதிலளிக்கும்போது ஏற்கனவே இந்த விஷயம் குறித்து வெங்கட் பிரபு என்னிடம் கேட்டிருந்தார். இந்த விஷயத்தை பொறுத்தவரை நான் கேப்டனின் இடத்தில் இருந்துதான் சிந்திக்க வேண்டும். கோட் திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் கேப்டனை காட்ட உள்ளோம் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என கேட்டுள்ளனர்.

GOAT
GOAT
Social Media Bar

விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் மீது அதிக மரியாதை கொண்டவர் கேப்டன். அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இதற்கு நல்ல முடிவையே சொல்லி இருப்பார். எனவே தேர்தல் முடிந்து விஜய் எங்களை சந்திப்பதாக கூறியுள்ளார். அவருக்கு நல்ல முடிவை கூறுவதாக வெங்கட்பிரபுவிடம் கூறியுள்ளேன் என்கிறார் பிரேமலதா.

ஆனால் விஜயகாந்தின் காட்சிகளை இறுதியாக பிரேமலதாவிடம் காட்டிவிட்டுதான் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இதற்காக எந்த தொகையும் வேண்டாம் என கூறிவிட்டாராம் பிரேமலதா