Cinema History
இதனாலதான் ஜெய் பீம் படத்துக்கு விருது கிடைக்கலை.. பத்திரிக்கையாளர் விளக்கத்தால் கடுப்பான ரசிகர்கள்!..
எந்த ஒரு துறையிலும் விருதுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதில் சினிமாவில் விருது என்பது நடிகருக்கும் இயக்குனருக்கும் மிக பெரும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது தற்சமயம் வழங்கப்பட்டது.
அப்படி வழங்கும்போது தமிழில் ஜெய்பீம், சார்ப்பாட்டா பரம்பரை, கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு எந்த ஒரு விருதும் வழங்கவில்லை. ஆனால் இவை யாவும் சமூக நீதியை கூறிய படங்களாகவும், தயாரிப்பு ரீதியிலும் சிறப்பான படங்களாக இருந்தன.
இந்த நிலையில் ஏன் அந்த படத்திற்கு தேசிய விருது தரவில்லை என்பது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு நேர்க்காணலில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஜெய் பீம் படத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதில் காட்டும் இருளர் சமூகம் குறித்த வசனங்களை ஒரு எழுத்தாளரிடம் சென்று எழுதி வாங்கினார் இயக்குனர் த.செ ஞானவேல்.
ஆனால் அவரிடம் ஜெய் பீம் படத்திற்காகதான் இந்த வசனத்தை வாங்குகிறோம் என்பதை கூறாமல் வேறு படத்திற்கு என கூறி வசனத்தை வாங்கினார். இதனால் கோபமான எழுத்தாளர் படத்திற்காக கொடுத்த 50,000 சம்பளத்தை திரும்ப அளித்துவிட்டாராம்.
இந்த மாதிரியான பிரச்சனைகள் அந்த படத்தில் இருந்ததால்தான் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என கூறியுள்ளார் செய்யாறு பாலு. இதனால் கடுப்பான ரசிகர்கள் “இதெல்லாம் ஒரு காரணமா?” என செய்யாறு பாலுவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
