Connect with us

இந்த படத்தையே இப்போ தான் பாக்குறீங்களா? பார்த்ததோடு பாராட்டும் தெரிவித்த ப்ரித்வி! அப்படி என்ன படம் அது?

prithviraj

News

இந்த படத்தையே இப்போ தான் பாக்குறீங்களா? பார்த்ததோடு பாராட்டும் தெரிவித்த ப்ரித்வி! அப்படி என்ன படம் அது?

Social Media Bar

இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசன் நடிப்பில், கடந்த 2022 நவம்பர் மாதமே, மலையாளத்தில் வெளியான படம் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ திரைப்படம். மருத்துவமனையில் இன்சூரன்ஸ் பணத்தை கொள்ளையடிக்கும் மோசடிகளை மையமாக்கி வெளிவந்த இந்த படத்தில், வினித் ஸ்ரீநிவாசன் ஆண்டி ஹீரோ கதாபாத்திரமாக நடித்து பராட்டுக்களைபெற்றார்.  

மலையாள படங்கள் கேரளாவை விட தமிழகத்தில் அதிக வரவேற்ப்பி பெறுவது ஒன்றும் புதிதிலேயே! அப்படிதான் இந்த படமும் தமிழகத்திலும் அதிக வரவேற்ப்பை பெற்றது. பல இயக்குனர்கள் இந்த படத்தை பார்த்து விட்டு அப்போவே ஆகோ ஓகோ னு பாராட்டினார்கள். 

ஆனால், நடிகர் பிரித்விராஜ்  2022ல் வெளியான இந்த படத்தை தற்போது பார்த்து விட்டு, அதற்கு பாராட்டுகளையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதில், இந்த படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் தான் இடம் பிடித்திருந்தது. ஆனாலும் சில காரணங்களால் என்னால் எப்படியோ பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறீர்கள்.

முகுந்தன் உன்னி என்னை ரொம்பவே கவர்ந்து விட்டான். தாமதமாக பார்ப்பதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அடுத்த படம் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.

To Top