இந்த மாதிரி நடிகையை அவாய்ட் பண்ணீடுங்க… பிரியா பவானி சங்கரை விமர்சித்த தயாரிப்பாளர்.. இதுதான் நடந்தது…
சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக பிரபலம் அடைந்து பிறகு வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கரை பொருத்தவரை மேயாத மான் என்கிற அவரது முதல் திரைப்படமே அவருக்கு எக்கசக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதற்கு பிறகு பெரும்பாலும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல கதைகளை கொண்டதாக இருந்தது அதனால் தொடர்ந்து அவர் வரவேற்பை பெற்று வந்தார். ஆனால் அதற்குப் பிறகு கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டு வந்தது.
யானை, ரத்னம், இந்தியன் 2 ஆகிய படங்கள் எல்லாம் வரிசையாக தோல்வியை தந்தது. இதனால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார் ப்ரியா பவானி சங்கர். ஆனாலும் அதற்கு அடுத்து அவருக்கு டிமான்டி காலனி 2 திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.
தயாரிப்பாளர் கூறிய விஷயம்:
இந்த நிலையில் ப்ரியா பவானிசங்கரை மோசமாக விமர்சித்து தயாரிப்பாளர் அவர்கள் பேசி இருக்கிறார். ஜீப்ரா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது ஒரு நடிகைக்கு நடிப்பதற்கு அக்ரிமெண்ட் போடுகிறோம் என்றால் முதலில் அவர்கள் பிரமோஷனுக்கெல்லாம் வர வேண்டும் என்று கூறி அக்ரிமெண்ட் போட வேண்டும்.
இல்லை என்றால் அந்த நடிகையை அவாய்ட் செய்து விடுங்கள் நானும் அதை தான் செய்தேன். என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். உடனே பத்திரிகையாளர்கள் இந்த திரைப்படத்தின் கதாநாயகி பிரியா பவானிசங்கர் அவர் எந்த ஒரு ப்ரமோஷனுக்கும் வரவில்லை அவரை தான் கூறுகிறீர்களா என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் ஆமாம் அவர் இப்பொழுது வெளிநாட்டில் இருக்கிறார் நடிகைகளை பொறுத்த வரை படத்தில் நடிப்பதோடு அவர்களது வேலை முடிவது கிடையாது இன்டர்வியூ கூட தன்னை யார் எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவர்கள் பேட்டி எடுத்தால் தான் நான் வருவேன் என்று பேசுகிறார் என்று பிரியா பவானி சங்கர் குறித்து காட்டமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.