ஒரு சில நடிகைகள் படங்களில் அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மேலும் சில நடிகைகள் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அதன் பிறகு சினிமாவில் சாதிக்க தொடங்குவார்கள்.
இந்நிலையில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பாவனி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக அறியப்பட்டு வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து, தற்பொழுது அனைவரும் அறியக்கூடிய நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது அவரைப் பற்றிய விமர்சனம் வந்து கொண்டிருக்கும் வேளையில் அவர் கூறியுள்ள ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர்
தமிழ் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறையில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியலில் நடித்து, பிறகு வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

அவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அப்பொழுது அனைவராலும் பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். முக்கியமாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்தார். இதற்காக பலரின் பாராட்டையும் இவர் பெற்றார். தற்பொழுது இவரின் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் வேளையில், இதில் நடித்த பிரியா பவாணி சங்கரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
ரஜினி கமல் நடிச்சா மட்டும் படம் ஓடாது
இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. எனவே அந்த படத்தில் பலரும் நடித்திருந்த நிலையில் அதில் பவானி சங்கரை மட்டும் குறிப்பிட்டு, இவர் ராசில்லாத நடிகர் அதனால் தான் படம் வெற்றி கொடுக்கவில்லை என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து பேசிய பவானி சங்கர், ரஜினி கமல் நடித்தால் மட்டும் படம் ஓடாது. மேலும் நான் நடித்த மேயாத மான் படம் வெற்றி பெற்ற போது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சரி. தற்பொழுது ஆயிரம் பேர் சேர்ந்து வேலை பார்த்த ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் அதற்கு ஒரு ஆள் மட்டும் எவ்வாறு காரணமாக இருக்க முடியும் என கூறியிருக்கிறார். மேலும் விமர்சனத்தை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
படத்தைப் பற்றி விமர்சனம் கவலை இல்லை. நெகட்டிவாக இருந்தாலும், பாசிட்டிவாக இருந்தாலும் அது விமர்சனம். ஆனால் முகம் தெரியாதவர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது கஷ்டமாக உள்ளது என அவர் தெரிவித்து இருக்கிறார்.






