Connect with us

விடாமுயற்சி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்… உண்மைதானா?.

ajith vidamuyarchi

News

விடாமுயற்சி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்… உண்மைதானா?.

Social Media Bar

அஜித் நடித்த வலிமை திரைப்படம் போலவே தற்சமயம் அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படமும் அதிக கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

விடாமுயற்சி திரைப்படமானது போன வருடம் தொடங்கியது. கிட்டத்தட்ட ரஜினி நடித்துவரும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பொழுதுதான் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது.

ajith-1
ajith-1

ஆனால் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து அந்த திரைப்படம் வருகிறார் அக்டோபர் 10 திரைக்கு வர இருக்கிறது. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது எப்பொழுது திரைக்கு வரும் என்பதே இன்னும் அறிவிக்கப்படவில்லை.

படத்தில் தாமதம்:

மேலும் படப்பிடிப்பும் இன்னும் முழுதாக முடியவில்லை. இதை குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அதில் அவர் பேசும்பொழுது விடாமுயற்சி படத்தின் முக்கால்வாசி காட்சிகளை முடித்து விட்டார்.

ajith
ajith

இன்னும் 45 நாட்களுக்கான படப்பிடிப்புகள் இருப்பதாக கூறி இருக்கிறார் அதற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தால் தொடர்ந்து 45 நாட்களில் அந்த படப்பிடிப்பை எடுத்து முடித்து விடுவதாக கூறி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.

வெளியீட்டு தேதி:

எனவே அஜித்தும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே படத்திற்கு எடிட்டிங் வேலைகள் எல்லாம் முக்கால்வாசி முடிந்து விட்டன எனவே இந்த 45 நாள் படப்பிடிப்பு முடிந்த உடனே அடுத்த டப்பிங் வேலைகளை முடித்து விட்டால் பட வேலைகள் எல்லாமே முடிந்துவிடும்.

கண்டிப்பாக இந்த வருட தீபாவளிக்கு விடாமுயற்சி திரைக்கு வரும் என்று கூறியிருக்கிறார் தனஞ்செயன். இதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

To Top