Connect with us

அஜித்கிட்ட பத்து லட்சம் வரை பணம் இழந்தேன்!.. அஜித்தால் பணத்தை இழந்த தயாரிப்பாளர்!.

ajith manikam narayanan

Cinema History

அஜித்கிட்ட பத்து லட்சம் வரை பணம் இழந்தேன்!.. அஜித்தால் பணத்தை இழந்த தயாரிப்பாளர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்காக புகழப்படும் சில பிரபலங்கள் இருக்கின்றனர். விஜயகாந்த் லாரன்ஸ் என்று மற்றவர்களுக்கு நன்மை செய்யும் நடிகர்களில் அஜித்தும் வெகு காலமாக இருக்கிறார் அவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளதாக அவரது ரசிக வட்டாரம் பலமுறை கூறியிருக்கின்றனர்.

அதே சமயம் திரைத்துறையில் பிரபலமாக உள்ள பல பத்திரிகையாளர்கள் கூட அஜித்தின் நன்மைகளை குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனது பேட்டியில் கூறும் பொழுது அஜித் தனக்கு மோசடி செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

அஜித் பெரிதாக பிரபலமாகாமல் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை அவசரமாக ஆறு லட்ச ரூபாய் கடன் வேண்டும் என்று மாணிக்கம் நாராயணனை நாடியுள்ளார். அவரும் இவருக்கு கடன் கொடுத்துள்ளார் அதன் பிறகு இந்த கடனை திரும்ப கேட்டபோது அதற்கும் பதிலாக உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் அஜித்.

இந்த சமயத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் அஜித் ஒப்புக்கொண்டார். அந்த படத்திற்கு சம்பளமாக 10 லட்சத்திற்கு மேல் ஒரு தொகையை கொடுத்திருக்கிறார் மாணிக்கம் நாராயணன். பிறகு அவருக்கு போன் செய்த அஜித் இந்த படம் வேண்டாம் சார். இதில் நான் நடிப்பதாக இல்லை இந்த படம் ஓடாது எனவே வேறு ஒரு படத்தில் உங்களுக்கு நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் அஜித்.

அதன் பிறகு சில வருடங்கள் ஆன பிறகு அஜித் எந்த படமும் நடித்து கொடுக்காத காரணத்தால் அந்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் மாணிக்கம் நாராயணன். ஆனால் அஜித் எந்த பணமும் அவரிடம் வாங்கவில்லை என்பது போல பேசியுள்ளார். இந்த நிகழ்வை பேட்டியில் கூறிய மாணிக்கம் நாராயணன். அஜித் ஒரு ஜென்டில்மேனாக இருந்தால் என்னிடம் பேசி பணத்தை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அவர் என்னை சந்திக்க கூட இல்லை என்று கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top