Tamil Cinema News
பாலா மாதிரி ஒரு சாடிஸ்ட்.. கஷ்டங்களை அனுபவித்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர். பெரும்பாலும் பாலா இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கக் கூடியவை என்றாலும் கூட பாலாவின் அணுகுமுறை என்பது மோசமானதாகவே இருந்து வந்துள்ளது.
நிறைய நடிகர்கள் தங்களுக்கு பாலா செய்திருக்கும் மோசமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து இருக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில் பாலா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர். தார தப்பட்டை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கூட நடிகை வரலட்சுமி சரத்குமார் விபத்துக்கு உள்ளானது பாலாவால் தான் என்று ஒரு பேச்சு உண்டு.
இந்த நிலையில் தயாரிப்பாளர் அழகன் பாலா குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தில் என்னை நடிப்பதற்காக பாலா அழைத்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.
அதற்காக என்னை 6 முதல் 7 மாதங்கள் தாடி வளர்க்க சொன்னான். ஏனெனில் தாடி பார்ப்பதற்கு நிஜமாக இருக்க வேண்டும் என்று கூறினார். நானும் அதற்காக தாடி வளர்த்தேன்.
ஆனால் படப்பிடிப்பு தளங்களில் நான் போடும் ஆடைகள் எல்லாம் மிகப் பழையதாக இருந்தது. அவை பல நாள் துவைக்காததாக இருந்தது. மிகவும் துர்நாற்றம் வீசுவதாக இருந்தன. ஏன் இவற்றை அணிய வேண்டும் என்று கேட்ட பொழுது அப்பொழுதுதான் பார்ப்பதற்கு நிஜமாக இருக்கும் என்று கூறினார். அவனை போல ஒரு சாடிஸ்ட்டை நான் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் அழகன்.
