News
தங்கலான் படத்தில் இதை பண்ணாதீங்க!.. ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க.. விமர்சனம் கொடுத்த இயக்குனர்!.
தற்போது தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் படமாக பட்டு வரும் வேளையில், இயக்குனர்களும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை காண்பிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் படமாக எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீப காலங்களாக குறிப்பிட்ட இயக்குநர்களும் ஒவ்வொரு சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களை வெளிப்படுத்தி வரும் வேளையில். அது சில சமயம் விமர்சனமாகவும் அல்லது சர்ச்சையாகவும் மாறிவிடுகிறது.
ஏனென்றால் சினிமா என்பது அனைவருக்கும் பொதுவான விஷயமாகும். சொந்த கருத்துக்காக சினிமா எடுப்பது என்பது மக்களைச் சென்றடையாது என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் வெங்கடேசன் அவரின் கருத்தை பற்றி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தங்கலான் திரைப்படம்
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படம் தங்கலான் . இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி என அனைவரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க சுரங்கம் அதாவது கே ஜி எஃப் இல் கதாநாயகன் விக்ரம் மற்றும் அவரின் ஆட்களுடன் தங்கம் தேடும் பணியில் ஈடுபடுகிறார். அப்போது நடக்கும் சில அமானுஷ்யமான விஷயங்கள் போன்ற சம்பவங்களை படமாக்கி உள்ளார்கள் என அப்போது தகவல் வெளியானது.
இந்நிலையில் தயாரிப்பாளர் வெங்கடேசன் தங்கலான் படத்தின் இயக்குனர் பற்றியும், படத்தைப் பற்றியும் கூறியிருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தயாரிப்பாளர் வெங்கடேசன் கூறியது
தயாரிப்பாளர் வெங்கடேசன் கூறும் பொழுது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் ஒரு பட்டியலின சமூகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் அனைவராலும் பாராட்டை பெற்றது. மேலும் வெற்றிமாறன் இயக்கிய மற்றொரு படமான விடுதலையும் குறிப்பிட்டு ஒரு ஜாதியின் பெயரை கூறாமல் ஒரு வாத்தியாரை வைத்து படம் நகர்ந்தது அதுவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பழைய படங்களில் கதாபாத்திரத்தின் பெயர் ஜாதி பெயரை வைத்து இருந்தாலும், எந்த இடத்திலும் இவர்கள் உயர்ந்த ஜாதி, இவர்கள் தாழ்ந்த ஜாதி என்று எங்கேயும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது அவரவர்களின் வலிகளை கூறுகிறோம் என ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ மதத்தையும் மட்டும் வைத்து படம் எடுக்கும் பொழுது அது மற்ற சமூகத்தினரால் வெறுக்கப்படும். சினிமா என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்நிலையில் மேலும் அவர் பேசும் பொழுது தற்போது ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படம் சமீபத்தில் இறந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பாக இருந்த தங்கலான் படம் வேறு. அவரின் கொலைக்குப் பிறகு இருக்கும் தங்கலான் படம் வேறு என அவர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசும் போது சினிமாவிலும் அரசியலிலும் நல்லவர்களை சம்பாதிக்கிறோமோ இல்லையோ எதிரிகளை யாரும் சம்பாதிக்க கூடாது என கூறினார். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் டிஜிட்டல் மீடியா இருக்கு. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் சொந்த கருத்துக்களை எழுதுவார்கள்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் ஒருவருடைய படம் வெற்றி பெற வேண்டும் என்றால் சொந்த கருத்தை மட்டும் கொண்டு படத்தை எடுத்தால் அது மக்களிடையே வெற்றி பெறாது என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தங்கலான் படத்தின் கதைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தில் தங்களின் சொந்த கருத்துகளை கொண்டு வர வேண்டாம் ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் ஆன படம் வரும்போது அனைவரிடத்திலும் வெற்றி அடையும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
