மூன்று நாள் வசூல் நிலவரம்!.. ஹிப் ஹாப் ஆதிக்கு கை கொடுத்ததா பி.டி சார் திரைப்படம்..!

தமிழில் ஆல்பம் பாடல்கள் பாடி அதன் வழியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்கள் பாடி வெளியிட்டு வந்த ஹிப்ஹாப் ஆதிக்கு முதன் முதலாக ஆம்பள திரைப்படத்தின் மூலமாக தமிழில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு அவரது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ச்சியை கண்டார் ஹிப் ஹாப் ஆதி. இதனை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஆதி நடித்த திரைப்படம் மீசைய முறுக்கு.

திரை வாழ்க்கை:

மீசைய முறுக்கு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கதாநாயகனாகவும் சினிமாவில் வலம் வர துவங்கினார். இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிடி சார்.

pt-sir
pt-sir
Social Media Bar

இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கிறார். பிடி சார் திரைப்படம் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் இந்த திரைப்படம் மூன்று நாட்கள் ஓடிய நிலையில் வெற்றி பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மொத்தமாக இந்த மூன்று நாட்களில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பிடி சார் திரைப்படம் . முன்பு வெளியான ஹிப் ஹாப் ஆதியின் திரைப்படங்களுடன் ஒப்பிடும்பொழுது இந்த திரைப்படத்தின் வசூல் என்பது குறைவுதான் என்று கூறப்படுகிறது.