Tamil Cinema News
எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுது… புஷ்பா பட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு நடந்த சோகம்.!
தற்சமயம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது.
புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்திற்காகதான் அந்த படம் அதிக பிரபலம் அடைந்தது. இதுவரை பார்க்காத ஒரு புது புது கதாபாத்திரமாகவும் அதே சமயம் ஹீரோயிசம் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரமாகவும் புஷ்பா கதாபாத்திரம் இருந்தது.
ஆனால் அழுக்கு ஆடையை அணிந்து கொண்டு ஹீரோவாக இருப்பதற்கான எந்த ஒரு விஷயமும் இல்லாமலேயே அந்த கதாபாத்திரம் இருந்தது. அதனால்தான் அந்தப் படம் அதிக பிரபலம் அடைந்தது.
புஷ்பா 2 டப்பிங் ஆர்ட்டிஸ்ட்:
இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்தே அல்லு அர்ஜுனுக்கு தமிழில் ஒரு ஆள் டப்பிங் செய்தார். அவர் சமீபத்தில் பேட்டியில் சில விஷயங்களை பேசி இருந்தார். அவர் கூறும் பொழுது புஷ்பா திரைப்படத்தின் டப்பிங்கை அல்லு அர்ஜுன் கேட்ட பொழுது அதை நான் சிறப்பாக செய்திருப்பதாக கூறினார்.
அதனால்தான் அவர் இரண்டாம் பாகத்திற்கும் என்னையே டப்பிங் செய்ய வைத்தார். டப்பிங் துறையை பொறுத்த வரை இப்பொழுது அதற்கு ஆபத்து வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் நாம் சாதாரணமாக ஒரு குரலில் பேசினாலே போதும் அதை ஷாருக்கானின் குரலாகவோ அல்லது பிரபாஸ் குரலாகவோ மாற்றிவிட முடியும்.
இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு வாக்கியத்தை எழுதினால் போதும். அந்த வாக்கியத்தை பிரபாஸ் குரலிலோ அல்லது ஷாருக்கான் குரலிலோ மாற்றி கொடுத்து விடும் நிலை வரும். அப்பொழுது எங்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்றும் இதனால் டப்பிங் ஆர்டிஸ்ட்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்