அவதாருடன் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ப்ரோமோ – அடுத்த ஹை பட்ஜெட் படம் தயார்..!

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். அந்த சமயத்திலேயே 1000 கோடி செலவில் அந்த படம் தயாரிக்கப்பட்டது.

அதன் வெற்றியை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனால் பல தமிழ் திரைப்பட நிறுவனங்களே தங்களது திரைப்படங்களை டிசம்பரில் வெளியிடுவதற்கு யோசித்து வருகின்றனர்.

புஷ்பா திரைப்படம் அதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டுள்ளன. ஆனால் புஷ்பா படம் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்கான காட்சிகளை ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி எடுத்து வருகின்றனர்.

எனவே அவதார் வெளியாகும் வாரத்திலேயே இந்த படத்தையும் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Refresh