News
ராயன் முதல் நாள் வசூல் நிலவரம்- மாஸ் காட்டுனுச்சா? லாஸ் ஆனுச்சா
Raayan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டவராக தற்பொழுது விளங்கி வருகிறார். தன்னுடைய அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் செல்வராகவனின் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் நடிகர் என்ற அந்தஸ்தையும் அத்திரைப்படம் தனுஷிற்கு வாங்கி கொடுத்தது.
அதன் பிறகு நடித்த “திருடா திருடி”, தேவதையை கண்டேன்” போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்து விட்டார் தனுஷ்.
அதன் பிறகு அவருடைய பயணங்கள் முழுவதும் வெற்றியாகவே அமைந்த நிலையில் பல வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் பல படங்களுக்கு பாடகராகவும், பாடலாசிரியர் என்று வெற்றி பயணத்தை தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இயக்குனர் தனுஷ்

பன்முகங்களைக் கொண்ட தனுஷ் தன் அண்ணன் இயக்குனர் செல்வராகவனின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தற்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் தனுஷ் தன்னுடைய 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இதனால் தனுஷின் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று ஜூலை 26, 2024 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ், எஸ். ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் முன்னணி நடிகராக நடிக்கும் 50-வது படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்தும். தனுஷ் முன்னணி நடிகராக நடிக்கும் 50-வது படம் என்பதால் அவரின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் ரசிகர்கள் நேற்று பாடம் வெளியானதை தொடர்ந்து அனைவரும் நேர்மறையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
ராயன் திரைப்படம் முதல் நாள் வசூல்
தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படம் நேற்று ஒருநாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மட்டும் ரூ.15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒருநாள் ரூ.10.6 கோடியும், தெலுங்கில் ரூ.1.8 கோடியும், கேரளாவில் 0.9 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் ரூ.13.65 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 20.70 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
மேலும் இத்திரைப்படம் வரும் நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
