News
நான்கே நாட்களில் ராயன் வசூல்.. மகாராஜாவை பின்னுக்கு தள்ளியாச்சு போல!.
ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களது ஐம்பதாவது திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்கிற ஆசை இருப்பதுண்டு. ஏனெனில் ஐம்பதாவது படம் நூறாவது படம் என்பதெல்லாம் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மைல் கல் போல என்று கூறலாம்.
அத்தனை திரைப்படங்களில் வெற்றி நடிகராக நடித்து சினிமாவில் இருப்பது என்பது அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்சமயம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் வெளியானது.
50 ஆவது படம்:
ராயன் திரைப்படம் தனுஷின் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். இது அதிக வெற்றியை பெற வேண்டும் என்று தனுஷ் மிகவும் ஆசைப்பட்டார் இதற்காக தனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளை எல்லாம் செய்து வந்தார் தனுஷ்
எந்த ஒரு திரைப்படத்திற்கும் இந்த மாதிரி எல்லாம் தனுஷ் பூஜை செய்வது கிடையாது. அந்த அளவிற்கு ராயன் படம் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ராயன் திரைப்படத்தில் தனுஷோடு சேர்ந்து எஸ்.ஜே சூர்யா செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.

படத்திற்கு அதிகமான வரவேற்பை ஏற்படுத்த வேண்டும் என்று அதிக நட்சத்திரங்களை இதில் நடிக்க வைத்திருந்தார் தனுஷ். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. தனுஷ் திரைப்படம் என்றாலே ஓரளவு மீடியமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும்.
பட வசூல்:
அதிக பட்ஜெட்டிற்கு எடுக்க மாட்டார்கள் ஏனெனில் தனுஷ் இப்போது வரை பெரிதாக 100 கோடியை தாண்டி எல்லாம் வசூல் கொடுத்தது கிடையாது ஆனால் ராயன் திரைப்படம் அப்படியொரு வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 26 ஆம் தேதி வெளியான ராயல் திரைப்படம் முதல் நாளே 13.65 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாள் 13.75 கோடி மூன்றாவது நாள் 15.25 கோடி வசூல் செய்தது. தற்சமயம் நான்காவது நாள் கிட்டத்தட்ட 7.25 கோடிக்கு ஓடி இருக்கிறது இந்த திரைப்படம்.
கிட்டத்தட்ட நான்கு நாட்களிலேயே 50 கோடிகள் வரை வசூல் செய்திருக்கிறது ராயன் திரைப்படம். எனவே கண்டிப்பாக இது 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது.
