Tamil Cinema News
ஹீரோவுடன் எல்லை மீறிய ரச்சிதா.. மடியில் அமர வைத்து சம்பவம்.! வெளியான முழு பாடல்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா. இவர் ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் மாதிரியான விஜய் டிவி சீரியல்களில்தான் நடித்து வந்தார்.
அந்த சீரியல்களில் நடித்தப்போதே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதனை தொடர்ந்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது இவரது புகழை இன்னமுமே அதிகரித்தது. பெரும்பாலும் பிக்பாஸ் பிரபலங்கள் அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்கதான் நினைப்பார்கள்.
அப்படியாக அப்போது ரச்சிதா நடித்த திரைப்படம் ஃபயர். இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் மூலமாக பிரபலமடைந்த நடிகர் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் உள்ள மெது மெதுவாய் என்கிற பாடலில் ரச்சிதா அதிக கவர்ச்சியுடன் நடித்திருப்பதாக ஏற்கனவே பேச்சுக்கள் இருந்தன.
அதற்கு தகுந்தாற் போல அந்த பாடலில் டீசர் வெளியானது. அதிலேயே ரச்சிதா அதிக கவர்ச்சியுடன் இருந்தார். இந்த நிலையில் இந்த பாடலில் முழு லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் எதிர்பாராத கவர்ச்சியில் தோன்றியுள்ளார் ரச்சிதா.
இந்த நிலையில் இந்த பாடல் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
