Connect with us

கூட்டத்த கூட்டிக்கிட்டு படப்பிடிப்பிற்கு வராதீங்க… ராதா ரவியை அவமானப்படுத்திய விஜய்!..

Cinema History

கூட்டத்த கூட்டிக்கிட்டு படப்பிடிப்பிற்கு வராதீங்க… ராதா ரவியை அவமானப்படுத்திய விஜய்!..

Social Media Bar

நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய். தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழின் மூத்த நடிகரான ராதா ரவிக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விஜய்க்கு பலர் ரசிகராக இருப்பது போலவே ராதா ரவி குடும்பத்திலும் கூட அவருக்கு ரசிகர்கள் இருந்தனர்.

ராதா ரவியின் பேர குழந்தை நடிகர் விஜய்யின் பெரும் ரசிகராக இருந்தார். அவர் விஜய்யை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே ராதா ரவி தனது குடும்பத்தையே அழைத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய்யை சந்தித்தார். விஜய்யும் அனைவரிடமும் நன்றாக பேசினார். பிறகு அனைவரும் கிளம்பிவிட்டனர்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து ராதா ரவிக்கு விஜய்யுடன் சந்திப்பு இருந்தது. அப்போது ராதா ரவிக்கு போன் செய்த விஜய்யின் உதவியாள் “சார் அன்னிக்கு மாதிரி கூட்டத்த கூட்டிட்டு வந்திடாதிங்க” என கூறியுள்ளார். இதனால் கடுப்பான ராதா ரவி நான் விஜய்யை சந்திக்கவே வரலை போயா.! என திட்டியுள்ளார்.

இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விஜய்க்கு வேணும்னா அது கூட்டமா இருக்கலாம். எனக்கு அது குடும்பமாச்சே என கூறியுள்ளார் ராதா ரவி.

To Top