Cinema History
இப்படி என்ன யாருமே கேட்டது இல்ல! – விஜய்யின் கேள்வியால் அசந்து போன ராதா ரவி..!
தமிழ் சினிமாவில் எவ்வளவோ முறை தோல்வியையும் அவமானங்களையும் கண்டிருந்தாலும் தொடர்ந்து தனக்கான பாதையை வகுத்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த நிலையில் தற்சமயம் விஜய் இருக்கிறார் என கூறலாம்.
ராதா ரவிக்கு சிறு வயது முதலே விஜய்யை தெரியும். இருவருக்குமிடையே நல்ல பழக்கமுண்டு. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.

பேட்டி ஒன்றில் ராதா ரவி பேசும்போது விஜய் மிகவும் அறிவானவர். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த நிலையில் இருக்கிறார். பலரும் பல விதமான கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் விஜய் மாதிரி நுட்பமாக யாரும் கேட்டதில்லை என்கிறார் ராதா ரவி.
ஒருமுறை ராதா ரவியை சந்தித்த விஜய் அவரிடம் “அங்கிள் உங்க அப்பா எம்.ஆர் ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நடந்துச்சுல்ல, அப்ப உங்க குடும்பத்தாரோட மனநிலை எப்படி இருந்தது” என கேட்டுள்ளார் விஜய்.
இதை கேட்ட ராதா ரவி அதிசயமாக பார்த்துள்ளார். எப்படியான சிந்தனை விஜய்க்கு இருந்திருந்தால் இப்படியான கேள்வியை கேட்டிருப்பார் என அவரை குறித்து பேட்டியில் கூறியுள்ளார் ராதா ரவி.
