தமிழ் திரைப்பட கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பல காலங்களாக தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இவர் இருந்து வந்தார். பிரபுதேவாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் நடன கலைஞர் என்றால் அது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான்.
சினிமாவில் முதலில் நடன கலைஞராக நடிக்க வந்திருந்தாலும் கூட சினிமாவில் நடிப்பின் மீது அதிகமாக ஆர்வம் இவருக்கு இருந்தது. இதன் காரணமாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்த நிலையில், அற்புதம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ட்ஜார் ராகவா லாரன்ஸ்.
அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குதல் தயாரித்தல் என்று திரைத்துறையில் உள்ள பல துறைகளிலும் லாரன்ஸ் கால் பதித்தார். சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.
jigarthanda-double-x-1-1
இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியில் பேசும்பொழுது நிறைய விஷயங்களை பேசி இருந்தார். முக்கியமாக ராகவா லாரன்ஸின் நடனத்தையே அப்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் குறை கூறியுள்ளார். ஒரு டான்ஸ் மாஸ்டர் போல் அந்த படத்தில் நீங்கள் ஆடக்கூடாது , நீங்கள் படத்தின் கதைப்படி பழங்குடியின மக்களை சேர்ந்தவர் எனவே அதற்கு தகுந்தார் போல் தான் உங்கள் நடனம் இருக்க வேண்டும் என்று அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
அதேபோல படத்தில் ஒரு காட்சியில் ராகவா லாரன்ஸ் கையில் துப்பாக்கியை சுற்றுவது போல காட்சி வரும் அதை எப்படி சுற்ற வேண்டும் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். அதை பார்த்த ராகவா லாரன்ஸ் சொல்வது மிகவும் எளிது அதை செய்வதுதான் கடினம் என நினைத்திருக்கிறார்.
karthiksubbaraj
அவர் நினைத்ததை அப்படியே புரிந்து கொண்டார் போல வேகமாக லாரன்ஸை அழைத்த கார்த்திக் சுப்புராஜ் அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கி எப்படி சுற்ற வேண்டும் என்று சுற்றி காட்டியுள்ளார். அதனை பார்த்ததும் லாரன்ஸ் அதிர்ச்சியாகி உள்ளார்.
இது குறித்து அந்த பேட்டியில் கூறும் பொழுது என்ன இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜிம் தலைவர் ரசிகன் தான் என்பதை நான் மறந்துவிட்டேன் பார்ப்பதற்கு தான் அமைதியாக இருப்பாரே தவிர நடனம் ஆடுவதிலிருந்து எல்லாமே அவருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார் லாரன்ஸ்.