Connect with us

உதவி பண்றதுக்காகவே ஒண்ணு கூடிய காம்போ!.. தனி தனியாவே பட்டையை கிளப்புவாங்க இனி சொல்லவே வேண்டாம்!..

bala lawarance

News

உதவி பண்றதுக்காகவே ஒண்ணு கூடிய காம்போ!.. தனி தனியாவே பட்டையை கிளப்புவாங்க இனி சொல்லவே வேண்டாம்!..

Social Media Bar

ராகவா லாரன்ஸ் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பலருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார். மிக முக்கியமாக மாற்று திறனாளி மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார். அவர் படம் இயக்க துவங்கியப்போது அவர்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகளை வழங்கினார்.

லாரன்ஸ் திரைப்படங்களில் அவர்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். அதே போல தொடர்ந்து ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்காக செலவு செய்து வருகிறார் லாரன்ஸ். அதே போல ஏழை எளிய மக்களுக்கு உதவுபவராக விஜய் டிவி பாலா அடுத்து மாறியுள்ளார்.

பாலாவை பொறுத்தவரை அவர் சக்திக்கு அப்பாற்ப்பட்டு பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இதற்கு முன்பு ஏழை மக்களுக்கு உதவியவர்கள் அனைவரும் நிறைய பணம் வைத்திருப்பவர்களாகதான் இருந்தார்கள்.

raghava-lawarance
raghava-lawarance

ஆனால் பாலாவை பொறுத்தவரை அவரிடமே எதுவும் இல்லாத போதும் இருக்கும் அனைத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கூடம் ஒன்றில் கழிப்பிடம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும் அதை கட்டி தருமாறும் பாலாவிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு அதிக தொகை செலவாவதை அறிந்த பாலா எதற்கும் நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்கலாம் என கேட்டுள்ளார். விஷயத்தை அறிந்த ராகவா லாரன்ஸ் உடனே கிளம்பி அந்த பள்ளிக்கு வந்து கழிவறைகளை பார்த்துவிட்டு அந்த பள்ளிக்கு நிதியுதவி செய்துள்ளார். மேலும் கணவனை இழந்த முருகம்மாள் என்கிற பெண்ணுக்கு லாரன்ஸ் உதவியுடன் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார் பாலா.

ஒருவேளை பாலாவும் ராகவா லாரன்ஸும் இனி தொடர்ந்து சேர்ந்தே நிதி உதவிகளை செய்தால் அது இன்னும் நிறைய மக்களுக்கு பயனளிக்கும் என கூறப்படுகிறது.

To Top