பிரபு தேவா வரலைனா என்ன ஒதுக்கி வச்சிருப்பாங்க!..சினிமாவில் ராகவா லாரன்ஸ் அனுபவித்த கொடுமைகள்..

Raghava Lawrence Jigarthanda Double X :  தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பஞ்சமில்லை அதற்கு ஏற்ப போட்டிக்கும் பஞ்சமில்லை. ஒரு சாதாரண மனிதன் நடிகராவது என்பது முந்தைய தலைமுறையில் திறமை, முயற்சி, உழைப்பு இந்த மூன்றும் இருந்தால் தலைசிறந்த நடிகராக முடியும். ஆனால் இன்றைய தலைமுறையில் நடிகராவது என்பதற்கு பல போட்டிகள்.

ஒரு சில நடிகர்கள் தன் தந்தை மூலம் திரையுலகில் நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.அந்த மாதிரியான வாய்ப்பை பெற்றவர்கள் சரியாக உபயோகித்துக்கொண்டார்களா என்று பார்த்தால் ஒரு சிலர் மட்டுமே. பெரும்பாலானோர் தன்னுடைய திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனவர்கள் தான்.

Social Media Bar

ஒரு சிலர் ஏதோ காரணத்தினால் திறமை இருந்தும் திரையுலகில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள். அதற்கான காரணம் முக அழகில்லை, உயிரமில்லை, நிறம் கருப்பு என்று பல காரணங்கள் கூறலாம். அப்படித்தான் ராகவா லாரன்ஸும் ஆரம்ப கால கட்டத்தில் திரையுலகில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் காரணம் அவருடைய நிறம் கருப்பு.

 ராகவா லாரன்ஸ் ஆரம்ப காலத்தில் ஒரு நடன ஊழியராகத்தான் திரையுலகிற்கு அறிமுகமானார். திறமை இருந்தும் அவர் கருப்பு நிறம் என்பதால் குழு நடனங்களில் கூட அவர் பின் வரிசைகைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் மிகுந்த மன வேதனைக்குள்ளானார்.

நடன இயக்குனர் பிரபுதேவா வருகைக்குப் பிறகுதான் நிறத்தைவிட திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் அதற்கு முன்பு வரை நிறத்தை காரணம் காட்டி கேமராவிற்கு முன் வரிசையில் ஆடும் வாய்ப்பை இழந்ததாகவும், அஜித் நடித்த அமர்களம் படத்தில் தான் முதன் முதலாக முழு பாட்டிற்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது அதற்கும் நடிகர் அஜித் தான் உதவி செயதார் என்றும் ஜிகர்தண்டா டபுள் X பட நிருபர்கள் சந்திப்பில் நடிப்பு அரக்கன் S J சூர்யா முன்  தனது திரையுலக அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

 S J சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் X படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.