Tamil Cinema News
1 கோடி ரூபாய்க்கு செய்த உதவி.. குடும்பத்தில் வந்த பிரச்சனை.. ஓப்பன் டாக் கொடுத்த லாரன்ஸ்.!
தமிழ் சினிமாவில் சின்ன நடன கலைஞராக அறிமுகம் ஆகி தற்சமயம் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் நடனத்தின் மீது ஆர்வம் காட்டி வந்தாலும் போக போக சினிமாவில் கதாநாயகன் ஆவது மீது ஆர்வம் காட்ட துவங்கினார்.
அப்படியாக அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் அற்புதம். அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ராகவா லாரன்ஸ்க்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது.
ஆரம்பம் முதலே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். நிறைய நிதிகளையும் இவர் அளித்துள்ளார்.அதே போல தொடர்ந்து மாற்றுதிறனாளி நபர்களுக்கு ராகவா லாரன்ஸ் நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்:
இப்படி உதவி செய்ததால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது கேரளாவில் வயநாட்டில் பேரிடர் நடந்தப்போது பலரும் அதற்கு நிதி அளித்து வந்தனர். அப்போது நானும் நிதி வழங்கினேன்.
கேரளாவில் வயநாட்டை கடவுளின் இடமாக நான் பார்த்தேன். அங்கு ஒரு கஷ்டம் எனும்போது என்னால் தாங்க முடியவில்லை. எனவே என் அம்மாவை அழைத்து சென்று 1 கோடி ரூபாய் நிதியாக கொடுத்தேன். மேலும் அங்கு முடிந்த அளவு வீடு கட்டி கொடுங்கள். அதில் ஒரு வீட்டை என் அம்மா திறந்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
அதற்கு பிறகு வீட்டுக்கு வந்த பிறகு இதற்காக எனது மனைவி வாக்குவாதம் செய்தார் என கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்