Movie Reviews
ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் படம்!.. எப்படியிருக்கு கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா!.. பட விமர்சனம்..!
தற்போது நடிகர்களை காட்டிலும் நடிகைகளும் பல முக்கிய கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மக்களிடையே பிரபலமாகியும் வருகிறார்கள்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பாலிவுட்டிலும் கலக்கி வரும் நிலையில், இவர் நடித்து தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் ரகு தாத்தா. தற்போது ரகு தாத்தா திரைப்படம் விமர்சனத்தை பற்றி காண்போம்.
கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா?
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இதை புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கொம்பலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்பு., கலாச்சார திணிப்பிற்கு எதிராக தனி ஆளாக போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காட்டி இருக்கிறது. மேலும் அந்தப் போராட்டத்தில் அந்தப் பெண் வெற்றி பெற்றாளா? என்பதுதான் படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.
படம் எப்படி இருக்கிறது?
இந்த படத்தின் கதைக்களம் 70-களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி திணிப்புக்கு போராடும் பெண்ணாக இருக்கிறாள். வங்கியில் வேலை செய்யும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணாக உள்ளார். மேலும் அவரின் தாத்தாவின் கடைசி ஆசைக்காக கயல்விழி (கீர்த்தி சுரேஷ்) திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். தெரியாத நபரை திருமணம் செய்வதற்கு, நன்கு பழகிய தமிழ்ச்செல்வனை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்.
ஆனால் தமிழ்ச்செல்வன் மற்ற ஆண்களைப் போலவே பிற்போக்கு சிந்தனை கொண்டவர் என்பதால் பணியிட மாற்றம் செய்து கொண்டு கல்கத்தாவிற்கு செல்ல முடிவு செய்கிறாள். அதற்காக அவர் ஹிந்தி பரிட்சை எழுத முயற்சிக்கிறார். இறுதியில் அவர் ஹிந்தி பயின்றாரா? கயல்விழிக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பது தான் மீதிக்கதை.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படங்களில் நடித்த மற்ற நடிகர்களின் நடிப்பும், நன்றாக உள்ளது. படத்தின் கதை அனைவரையும் ஈர்த்தாலும் படத்தை வெளிக்கொண்டு வந்த விதம் ரசிகர்களை சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும். ரகு தாத்தா படத்தை நகைச்சுவையாகக் கொண்டு சென்று இருப்பது படத்திற்கு நன்றாக அமைந்துள்ளது.
ஆனால் இந்த திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் டம் நன்றாக அமைந்திருக்கும் என தோன்றும்படியாக உள்ளது. மேலும் படத்திற்கு காமெடி காட்சிகள், இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால் படத்தின் திரைக்கதை மற்றும் பார்ப்பதற்கு ஒரு டிராமா போல் தெரிகிறது. மேலும் படம் எமோஷ்னலாக மக்களுடன் இணையவில்லை என்று தான் கூறவேண்டும்.
