News
திரையரங்கில் டம்மியான ரகுதாத்தா.. ஓ.டிடி தேதி அறிவிப்பு.. இவ்ளோ சீக்கிரமாவா?
சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த அளவு வெற்றி படங்களை கொடுத்தாலும் அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்த இவர், சூப்பர் ஸ்டார், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் ரகு தாத்தா திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
ரகு தாத்தா
நடிகை கீர்த்தி சுரேஷ் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த திரைப்படம் ரகு தாத்தா. இந்தப் படத்தை சுமன் குமார் எழுதி இயக்கியிருந்தார். மேலும் கேஜிஎப் போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நேரடியாக தமிழில் இந்த திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரகு தாத்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் படத்தை பார்த்த பலரும் பல கலவையான விமர்சனம் கூறிய நிலையில் ரகு தாத்தாவிற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் குறைந்து இருந்தது.
மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக நடித்திருந்தார். ஹிந்து திணிப்புக்கு எதிராகவும் பல கருத்துக்களை தெரிவிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்க பல நகைச்சுவை கலந்த காமெடி வசனங்களை கீர்த்தி சுரேஷ் பேசுவது மக்களை கவர்ந்த நிலையில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது.
ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ்
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது ரகு தாத்தா. இந்த படத்துடன் இந்திய சினிமாவே எதிர்பார்த்த தங்களான் மற்றும் திரில்லர் படமான டிமான்டி காலனி 2 என இரு திரைப்படங்களும் வெளியானது. இந்த இரு படங்களுடன் ரகு தாத்தா போட்டியில் எவ்வாறு சமாளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை ரூபாய் 35 கோடி மட்டும் வசூல் செய்திருந்தது.

எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காத நிலையில் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் சுமாராக ஓடிய ரகு தாத்தா ஓடிடி தளத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
