Connect with us

தில்லு இருந்தா தொட்றா.. கத்தியோடு நின்ற ரகுவரன்! – உண்மை சம்பவத்தை பகிர்ந்த ரகுவரன் சகோதரர்

Raghuvaran

Actress

தில்லு இருந்தா தொட்றா.. கத்தியோடு நின்ற ரகுவரன்! – உண்மை சம்பவத்தை பகிர்ந்த ரகுவரன் சகோதரர்

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுவரன். பாட்ஷா, ரட்சகன், காதலன் என பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரும் அங்கீகாரத்தை பதித்தவர். தனது முதுமை காலங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களை தவிர்த்து குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அப்பா கேரக்டர்களிலும் நடித்து வந்தார் ரகுவரன்.

ரகுவரன் படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலுமே கோபக்காரராக எதற்கும் அஞ்சாதவராக இருந்துள்ளார். அதற்கு உதாரணமான ஒரு சம்பவத்தை சமீபத்தில் ரகுவரனின் சகோதரர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த சமயம் ரகுவரன் மாடர் தோட்டம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். ரகுவரன் காரில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே காரில் வந்த சில நபர்கள் ரகுவரனின் கார் மீது மோதும் வகையில் அருகில் வந்துள்ளனர். ரகுவரன் அந்த கார்மேல் மோதாமல் இருக்க பிரேக் பிடித்து விபத்தை தவிர்த்துள்ளார். அப்போது எதிர் காரில் இருந்தவர்கள் ரகுவரனை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதனால் கடுப்பான ரகுவரன் காரை வேகமாக ஓட்டி சென்று அந்த காரை வழிமறித்து தனது காரை நிறுத்தியுள்ளார்.  பின்னர் காரை விட்டு இறங்கி பேனட் மீது ஏறி அமர்ந்து தன் சட்டைப் பையிலிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு திட்டிய கும்பலை பார்த்து ”ஆறு பேர் இருக்கீங்களா..முடிஞ்சா என்னைத் தொடு” என்று தில்லாக சொல்லியுள்ளார்.

இதை பார்த்த அந்த பகுதியிலுள்ள பலர் ஏதோ ஷூட்டிங்கில் ரகுவரன் நடிக்கிறார் போல என நினைத்து அந்த இடத்தில் குவிந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த நடிகர் நாசர் இந்த பிரச்சினையை கண்டு ரகுவரனை சமாதானம் செய்து தனது காரிலேயே வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ரகுவரன் காரை அவரது சகோதரர் ஓட்டி சென்றுள்ளார். இது பற்றிக் கூறிய ரகுவரனின் சகோதரர் ”ரகுவரன் இப்படித்தான் லோக்கல் என்றால் லோக்கலா இருப்பாரு ஹை கிளாஸ் என்றால் ஹை கிளாஸ் ஆக இருப்பார்” என்று கூறியுள்ளார்.

To Top