Connect with us

குடிநீரில் சிறுநீரை கலந்த ஜெயம் ரவி பட நடிகை.. இதுதான் காரணமாம்!.

jayam ravi

News

குடிநீரில் சிறுநீரை கலந்த ஜெயம் ரவி பட நடிகை.. இதுதான் காரணமாம்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாவது உண்டு. அதில் ஒரு சில நடிகைகள் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். ஒரு சில நடிகைகள் சில படங்கள் நடித்திருந்தாலும் அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகருடன் ஒரு படம் மட்டும் நடித்திருந்த நிலையில் தற்பொழுது இவரின் பெயரை சொன்னால் கூட யாருக்கும் நினைவிற்கு வராத அளவிற்கு உள்ள நடிகை தான் ராகினி திவேதி. தமிழில் வேண்டுமானால் இவரை யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர் பிரபல கன்னட திரைப்பட நடிகை ஆவார்.

தற்பொழுது இவர் செய்திருக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

ராகினி திவேதி

மாடலிங் துறையில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ராகினி திவேதி பிரபல வடிவமைப்பாளர்களான ரிது குமார், ரோஹித் பால் , தருண் தஹிலியானி , மணீஷ் மல்ஹோத்ரா போன்றவர்களுக்கு மாடலாக இருந்துள்ளார்.

மேலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியாவில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் ஆனார்.

ragini

கன்னட படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் பிரபலம் அடைந்தார். இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “நிமிர்ந்து நில்” என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆனால் அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

மேலும் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கன்னட திரைப்படத்துறையில் பாடகர்கள் மற்றும் நடிகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக மூன்று பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கைது செய்தது. அந்த அந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

குடிநீரில் சிறுநீரகத்தைக் கலந்த ராகினி திவேதி

இவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது இவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிவதற்காக இவருடைய சிறுநீரை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் இவருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது இவர் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டால் எங்கு உண்மை தெரிந்துவிடுமோ என்ற காரணத்தினால் சிறுநீரில் குடிநீரை கலந்து மருத்துவரிடம் கொடுத்திருக்கிறார். இதனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் சிறுநீரகத்தில் குடிநீரை கலந்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் அறிக்கையின் போது சிறுநீரகத்தில் குடிநீரை கலந்து கொடுத்து இருக்கிறார். மேலும் உண்மையை மறைக்க முயற்சி செய்திருக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்திருந்தார்கள்.

இதன் பிறகு தான் அவர் ஆதாரத்தை அளிக்க முயற்சி செய்ததாகவும், இந்த குற்றத்தை அவர் செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இவர் கர்நாடக காவிரி பிரச்சினையின் போது எங்கள் தண்ணீர்… நாங்கள் ஏன் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டும்? என கேலியாக வீடியோ செய்து பதிவிட்டு இருந்தார். தற்பொழுது குடிநீரால் தான் இவர் சிறைக்குச் சென்றிருக்கிறார். எனவே கர்மா யாரையும் சும்மா விடாது என பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்து வருகிறார்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top