தமிழில் எல்லா நடிகர்களாலும் தொடர்ந்து எப்போதுமே ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சில நடிகர்கள் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் கூட போக போக அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்லும். அதற்கு பிறகு அவர்களுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.
இந்த நிலையில் அவர்கள் கதாநாயகனாக நடிப்பதை விட்டு துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்குவர். இப்படியான சம்பவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே நடந்துள்ளது எனும்போது மற்ற நடிகர்களுக்கு நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இந்த நிலையில் நடிகர் ரகுமானும் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்தவர்தான். அவர் நடித்த சங்கமம் திரைப்படம் மிகவும் பிரபலமாக திரைப்படமாகும். அதற்கு பிறகு வாய்ப்பை இழந்த ரகுமான் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
முக்கியமாக அவர் வில்லனாக நடிக்க துவங்கினார். அதுக்குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது வில்லனாக நடித்தப்போது ஒரு சீனியர் ஆக்டர் என்கிற மரியாதையை கூட எனக்கு யாரும் கொடுக்கவில்லை. அதே போல சிங்கம் 2 திரைப்படத்தில் ரகுமான் வில்லனாக நடித்தார். அப்போது ஜெயில் காட்சி ஒன்றில் தெரியா தனமாக சங்கிலி ஒன்று அவரது பின் மண்டையில் அடித்து அவருக்கு தலையில் ரத்தம் வந்துவிட்டதாம்.
வில்லனாக நடிக்க சென்று இப்படியான துன்பங்களை அனுபவித்தேன் என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.






