Connect with us

ரஜினி 170  அடுத்த அப்டேட் வந்தாச்சு!

Actor Rajini

News

ரஜினி 170  அடுத்த அப்டேட் வந்தாச்சு!

Social Media Bar

ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படம், ஜெயபீம் பட இயக்குனர் தா.சே ஞானவேல் இயக்கத்தில் வெற்றிகரமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டு, படக்குழு வெளியிட்ட பிறந்தநாள் டீசர் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

ரஜினியின் 170 வது படமான இதை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.
இந்த படத்தின் தொடக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புத்தகத்தை ரஜினி படித்துக் கொண்டிருக்க, அதற்கு அடுத்த சாட்டிலேயே லத்தையுடன் நடந்து வந்து ‘குறி வச்சா இறை விழனும்’ என்ற வசனத்தை கூறுவது போல் இதன் ட்ரெய்லர் வெளிவந்து ரசிகர்களை உற்றாகப் படுத்தியது.
ஜெயிலர் திரைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த ரஜினி இதில் கருப்பான மொழியும் ட்ரிம் செய்த வெள்ளை தாடியமாக காட்சியளிப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடியில் மற்றும் சென்னையில் நடந்த இதன் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கட்டப்பாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ராணா தனது முதல் நாள் படப்பிடிப்பை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் அதனை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் 170 ஆவது திரைப்படமான ‘வேட்டையன்’ இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top