News
ரஜினி மகளின் அடுத்த படம் – சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஷ்ணு விஷால்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் தமிழில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் கோச்சடையான் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்சமயம் மீண்டும் படம் இயக்குவதற்கு தயாராகிவருகிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விக்ராந்த் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் நண்பர்கள் என்பதால் இருவருமே கதாநாயகர்களாகவே இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. லால் சலாம் என்கிற இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கோச்சடையான் தோல்வியை அடுத்து செளந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் நடிப்பதில்லை என இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு அவர் தேவையாய் இருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
