News
நீங்க மட்டும்தான் சிங்கிள் விடுவீங்களா? – களத்தில் இறங்கிய துணிவு டீம்.!
நேற்றைய தினம் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியானது. விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே வெளியாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படம் வெளியிடுகின்றனர். எனவே அஜித் படத்தின் துணிவு படத்தின் முதல் பாடலையும் வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சில்லா சில்லா என்கிற இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துணிவு படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்த நிலையில் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் சென்று கொண்டுள்ளன.
