நினைச்சா நானே எலிமினேட் குடுப்பேன் – வார்னிங் கொடுத்த ஆண்டவர்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் ஒரு பார்வையாளர் கூட்டம் உண்டு. அதிலும் இந்த ஆறாவது சீசன் துவங்கியது முதலே ஒரே சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டுள்ளது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் சில விதிகள் உண்டு. எப்போதும் மைக் மாட்டியிருக்க வேண்டும். அவர்கள் என்ன பேசினாலும் அதை தமிழ் அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ரகசிய வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.

ஆனால் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒரு மாதம் ஆனாலும் கூட இன்னும் சிலர் நிகழ்ச்சியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகின்றனர். போன வாரமும் கூட சிலர் இந்த விஷயங்களை செய்தனர்.

எனவே இதுக்குறித்து பேசிய கமல்ஹாசன், இனி இந்த மாதிரி விதி மீறல்களை மேற்கொண்டால் என்னால் உங்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும். என கூறி எச்சரித்தார்.

Refresh