News
இவ்ளோ கொடூரமான கேரக்டரில் நடிக்க மாட்டேன்? – இந்தியன் 2வை கண்டு பயந்த சத்யராஜ்
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. ஏற்கனவே இந்தியன் படத்தின் முதல் பாகமே மக்கள் இப்போது வரை அலுப்பு தட்டாமல் பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சங்கர்தான் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க நடிகர் சத்யராஜீடம் பேசியுள்ளனர்.
படத்தில் இந்த கதாபாத்திரத்தை கேள்விப்பட்ட சத்யராஜ், இந்த வில்லன் கதாபாத்திரம் மிக மோசமான கதாபாத்திரம் மிக மோசமான கதாபாத்திரமாக உள்ளது. இதுவரை நான் இப்படியொரு கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை.
இந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா? என்பது சந்தேகமே. எனவே இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு எனக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என கேட்டுள்ளார் சத்யராஜ்.
யோசித்து சொல்கிறோம் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.
