ஏ.வி.எம் படத்துல இனிமே ரஜினி நடிக்க மாட்டார்? – வைரமுத்து செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பாளர் நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தை பல ஆண்டுகள் நடத்தி வந்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏ.வி.எம் நிறுவனம் பல நடிகர்களை சினிமாவில் வளர்த்துவிட்டது எனலாம். 

Social Media Bar

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பெரிய அளவில் வளர்வதற்கும் கூட ஏ.வி.எம் உதவியுள்ளது. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம் நிறுவனத்திடம் அதிக நட்புறவில் இருந்தார்.

இந்த நிலையில் ஒரு சமயம் ஏ.வி.எம் சரவணனை சந்தித்த வைரமுத்து ஏ.வி.எம் சரவணனிடம் “இனி ரஜினிகாந்த் ஏ.வி.எம் திரைப்படங்களில் நடிப்பது கஷ்டம்” என கூறியுள்ளார். ஏன் அப்படி கூறுகிறீர்கள்? என வைரமுத்துவிடம் ஏ.வி.எம் சரவணன் கேட்டுள்ளார்.

அதற்கு வைரமுத்து ”ரஜினியிடம், ஏ.வி.எம்மின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேசுவதை நான் கேட்டேன். ஏ.வி.ஏம் நிறுவனத்தின் படங்களை யாரும் பார்ப்பதில்லை என அவர் ரஜினியிடம் கூறினார்” என விளக்கினார் வைரமுத்து.

ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை ஏ.வி.எம் சரவணன். பிறகு சில நாட்கள் கழித்து ஏ.வி.எம் சரவணனுக்கு போன் செய்தார் ரஜினி. அடுத்து தீபாவளிக்கு படம் நடிப்பது குறித்து பேச துவங்கினார். இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக ரஜினி காட்டிக்கொள்ளவே இல்லை.