பாபாவுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே! – ரஜினியும் ரகுமானும் செய்த வேலை!

பல காலங்களாகவே அதிகமான இறை பக்தி கொண்ட ஒரு நபராக ரஜினி இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த காலம் முதலே ராகவேந்திரர் மீதான பக்தி, பாபா மீதான அவரது பக்தி என அளவுகடந்த பக்தி கொண்டவர் ரஜினி.

வருடா வருடம் இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இமயமலைக்கு சென்று வருவதையே மையமாக வைத்துதான் அவர் பாபா திரைப்படத்தின் கதையை எழுதினார்.

தற்சமயம் இந்த படம் மறு வெளியீடாகி ஓடி கொண்டுள்ளது. படத்தில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுடன் தர்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பெரும் பாபா பக்தராக இருக்கும் ரஜினி வேறு கடவுள்கள் மீது நம்பிக்கை வைப்பது தவறில்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தர்காவிற்கு செல்வதற்கு முன்பே ரஜினிகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Refresh