ஊழியரை தயாரிப்பாளராக மாற்றிய ஜெய் சங்கர்? – யார் அந்த தயாரிப்பாளர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஆரம்பக்காலக்கட்டங்களில் இப்போது இருப்பது போல சினிமா இருக்கவில்லை. பல நடிகர்கள் உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர்களாக இருந்தனர்.

அதில் முக்கியமான நடிகர் ஜெய்சங்கர். ஒரு நடிகராக பலருக்கும் ஜெய் சங்கரை தெரிந்திருக்கும். ஆனால் அவர் பல இயக்குனர்களுக்கு உதவி செய்துள்ளார்.

ஜெய்சங்கர் காலத்தில் ஏ.எல்.எஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நிறுவனத்தை சீனிவாசன் என்பவர் நடத்தி வந்தார். நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியாக வீரய்யா என்பவர் இருந்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் சீனிவாசன் காலமானார். இதனால் ஏ.எல்.எஸ் நிறுவனம் மிகவும் சரிவை கண்டது. அப்போது வீரய்யாவை வீட்டிற்கு வரும்படி அழைத்தார் ஜெய் சங்கர்.

அங்கு சென்ற வீரய்யாவிடம் ஜெய்சங்கர் “இனி நீங்கள் இன்னொரு தயாரிப்பு நிறுவனத்தில் சேர்வது எல்லாம் கஷ்டமான காரியம், அதனால் ஒன்று செய்யுங்கள். என்னை வைத்து ஒரு படம் தயாரியுங்கள். படத்திற்கான தயாரிப்பு செலவை கூட நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் தயாரிப்பாளர் ஆக வேண்டும்” என கூறியுள்ளார்.

அப்போதைய காலக்கட்டத்தில் இப்படி பலருக்கு உதவியுள்ளார் ஜெய் சங்கர்.

Refresh