ரஜினியின் அடுத்த படத்தில் கூட்டு சேரும் ஆக்ஷன் கிங்!.. மங்காத்தா லெவல் இருக்குமோ..
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்சமயம் கேரளாவில் நடைப்பெற்று வருகிறது.
என்கவுண்டருக்கு எதிராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த திரைப்படம் குறித்து இப்போதே மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிகர் அர்ஜூனும் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறகனவே அர்ஜுன் லியோ திரைப்படத்தில் நடிப்பதே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதில் அவரே ரஜினிகாந்த் படத்திலும் நடிக்கிறார் என்னும் செய்தி இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை மங்காத்தா திரைப்படத்தில் வருவது போல ரஜினியும் அர்ஜுனும் காம்போ போட்டு நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.