Connect with us

கொஞ்சம் விட்டா இவன் நம்மளை தூக்கி சாப்பிடுடுவான்!.. வில்லன் நடிகரை பார்த்தே பதற வைத்த ரஜினிகாந்த்!..

rajinikanth raguvaran

Cinema History

கொஞ்சம் விட்டா இவன் நம்மளை தூக்கி சாப்பிடுடுவான்!.. வில்லன் நடிகரை பார்த்தே பதற வைத்த ரஜினிகாந்த்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால் தான் அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறோம். ரஜினிகாந்த் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது.

நடிப்பை பொறுத்தவரை கமல்ஹாசன் அளவிற்கு ரஜினிகாந்திற்கு சிறப்பான நடிப்பு கிடையாது என்று சிலர் கூறுவது உண்டு. ஏனெனில் கண்ணீர் வரும் காட்சிகள், உணர்ச்சிவசமான காட்சிகள் போன்றவற்றை ரஜினி அவ்வளவு சிறப்பாக செய்ய மாட்டார் என்கிற பெயர் அவருக்கு உண்டு.

இதனால் ரஜினி எப்போதுமே தன்னை விட சிறப்பாக நடிக்கும் நடிகர்களை கவனித்துக் கொண்டே இருப்பாராம். அதன் மூலம் அவரது நடிப்பை அவர் மேம்படுத்தி கொள்வார். அதேபோல நடிகர் ரகுவரனுடனும் ரஜினிக்கு சில சம்பவங்கள் நடந்துள்ளது.

rajinikanth raghuvaran batcha
rajinikanth raghuvaran batcha

ரகுவரன் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய தமிழ் நடிகர் ஆவார் அவரது நடிப்பை கண்ட ரஜினிகாந்த் தொடர்ந்து தனது திரைப்படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். அதே சமயம் தன்னை தாண்டிய ஒரு நடிப்பை ரகுவரனால் கொடுக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் அறிந்திருந்தார்.

எனவே சிவா முத்து பாட்ஷா போன்ற எந்த ஒரு திரைப்படத்திலும் ரகுவரன் நடிக்கும் பொழுது அவர் அருகில் நின்று அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாராம் ரஜினிகாந்த். எதற்காக ரகுவரன் நடிப்பிற்காக இவ்வளவு புகழப்படுகிறார் என்பதை அதன் மூலம் அறிந்து கொண்டார் ரஜினிகாந்த்.

தனது நடிப்பை மேம்படுத்திக் கொள்ளவும் அது அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால் ரஜினி இருக்கும்போது ரகுவரனுக்கு நடிப்பது கஷ்டமாக இருக்குமாம். ஏனெனில் ரஜினி இப்படி பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி நடிப்பது என்று அவருக்கு தோன்றுமாம். அப்படி வில்லன் நடிகரின் நடிப்புக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

Articles

parle g
madampatty rangaraj
To Top