எஸ்.கே கிட்ட இதை எதிர்பார்க்கல… அமரன் குறித்து சூப்பர் ஸ்டார் வெளியிட்ட வீடியோ.. யாருக்குமே கிடைக்காத கௌரவம்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை ராணுவம் குறித்து வந்த திரைப்படங்களிலேயே வித்தியாசமான திரைப்படமாக இது இருக்கிறது.
ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல வசூலை கொடுத்து வருகிறது.
இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இதற்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய ரஜினிகாந்த் கூறும் பொழுது சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒரு படமாக அமரன் திரைப்படம் இருக்கும்.
அமரன் குறித்து ரஜினி:
அமரன் திரைப்படத்தை நான் பார்த்தேன் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை அந்த திரைப்படம் காட்டி இருக்கிறது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாக அமரன் இருக்கும். இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இவர்களது நடிப்பை அடித்துக் கொள்ளவே முடியாது.

அப்படி ஒரு நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கின்றனர் உண்மையான ராணுவ வீரர் போலவே சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் அதில் உள்ள ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக இருந்தது. அந்த திரைப்படத்தை பார்த்த பிறகு என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை என்று புகழ்ந்து பேசி இருந்தார் ரஜினிகாந்த்.
பெரும்பாலும் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை பார்த்தால் அந்த படத்தில் நடித்தவர்களையோ அல்லது இயக்குனரையோ அழைத்து வாழ்த்து தெரிவிப்பார். அது ஒரு புகைப்படமாக வெளிவரும் மற்றபடி இப்படி வீடியோவாக எல்லாம் யாருக்கும் வெளியிட்டது கிடையாது.
இப்படி சிவகார்த்திகேயனுக்கு தான் முதல்முறையாக வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ரஜினிகாந்த் இந்த நிலையில் எதிர்காலத்தில் ரஜினிகாந்தும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்று கேள்விகள் எழத் துவங்கி இருக்கின்றன.