Connect with us

பாதி ஷூட்டிங்கே முடிஞ்சுட்டு.. ஒரே நைட்டில் கதையை மாற்றிய ரஜினிகாந்த்!.. அட கொடுமையே!..

rajinikanth

Cinema History

பாதி ஷூட்டிங்கே முடிஞ்சுட்டு.. ஒரே நைட்டில் கதையை மாற்றிய ரஜினிகாந்த்!.. அட கொடுமையே!..

Social Media Bar

ஒரு திரைப்படம் எடுத்து முடிப்பதற்குள் அந்த படத்தில் எந்த ஒரு மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம். அப்படி ரஜினி திரைப்படத்தில் முக்கால்வாசி படம் எடுத்து முடித்த பிறகு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

1990களில் ரஜினியை வைத்து இயக்குனர் ராஜசேகர் ஒரு திரைப்படத்தை இயக்க நினைத்தார். அந்த படத்தின் கதையையும் ரஜினியிடம் கூறினார் ரஜினிக்கு அந்த கதை பிடித்திருந்தது. எனவே அதனை தொடர்ந்து அது திரைப்படமாக்கப்பட்டது.

மொத்தமே 30 நாட்களில் அந்த படத்தை முடிக்க இருந்தார் ராஜசேகர். ஏனெனில் குறைவான பட்ஜெட்டில்தான் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 நாட்கள் படபிடிப்பு முடிந்துவிட்டது. தினமும் படப்பிடிப்பிற்கு வரும் ரஜினிக்கு ஏதோ ஒரு விஷயம் உறுத்தலாகவே இருந்தது.

இந்த நிலையில் 15 வது நாள் படப்பிடிப்பை நிறுத்தினார் ரஜினி என்னவென்று கேட்ட பொழுது இந்த படத்தின் கதை மிகவும் சுமாராக இருக்கிறது இந்த படம் ஓடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே படத்தின் கதையை மாற்றுங்கள். என்று கூறிவிட்டார்.

அதனை தொடர்ந்து திரும்ப மொத்த படத்தின் கதையையும் மாற்ற வேண்டிய நிலை வந்தது. இந்த நிலையில் ரஜினி ஒரு படத்தின் சீடியை கொடுத்து இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வோம்.  எனவே இதை இரவோடு இரவாக பாருங்கள் என்று சென்றுவிட்டார்.

இரவோடு இரவாக அவர்களும் படத்தை பார்த்துவிட்டு திரும்ப படத்திற்கு முழுக்கதையையும் எழுதி முதலில் இருந்து திரும்ப படத்தை துவக்கினர். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் தர்மதுரை. இத்தனைக்கும் முதலில் எடுக்கப்பட்ட படம் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து இருந்தது.

இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு சென்று இருந்தால் அந்த படமே முடிந்திருக்கும். இருந்தாலும் ரஜினிக்காக அந்த படத்தை பாதியிலேயே விட்டார் தயாரிப்பாளர். பெரும் நடிகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது இப்படியான சம்பவங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு நிகழ்ந்துள்ளது.

To Top