Connect with us

முதல்ல படத்தை பார்த்தப்ப எனக்கு பிடிக்கல – பாட்ஷா படத்தை சிறப்பா மாத்துனது அவருதான்!.. ரஜினி சொன்ன உண்மை…

rajinikanth

Cinema History

முதல்ல படத்தை பார்த்தப்ப எனக்கு பிடிக்கல – பாட்ஷா படத்தை சிறப்பா மாத்துனது அவருதான்!.. ரஜினி சொன்ன உண்மை…

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். இப்போது வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டு மாஸ் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் படத்திற்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இன்னமும் மக்கள் அவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாட அவரது உழைப்பே முக்கிய காரணமாக உள்ளது. ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் துவங்கி இப்போது வரை இளம் கதாநாயகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

வருகிற 10 ஆம் தேதி ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படம் குறித்து பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்தே அந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் பல படங்கள் அவருக்கு மைல்க்கல்லாக இருந்துள்ளன. அதில் பாட்ஷா, அண்ணாமலை, முத்து போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. அதிலும் பாட்ஷா திரைப்படத்தை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு கூட்டமுண்டு.

ஆனால் பாட்ஷா படத்தை எடுத்து முடித்த பிறகு அந்த படம் ரஜினிகாந்திற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். இந்த படம் ஓடுமா? என்கிற சந்தேகத்தில் இருந்துள்ளார் ரஜினிகாந்த். பிறகு இசையமைப்பதற்காக அந்த படம் தேவாவிடம் சென்றுள்ளது. உடனே தேவாவிற்கு போன் செய்த ரஜினி, “தேவா படம் நல்லா இருக்கா?” என கேட்டுள்ளார். அதற்கு தேவா என்ன சார் இப்படி கேக்குறீங்க என்றுள்ளார். அதற்கு ரஜினி இல்லை படம் அண்ணாமலை அளவிற்கு இருக்கா என கேட்கவும் சார் படம் 10 அண்ணாமலைக்கு சமம் சார் என கூறியுள்ளார்.

பிறகு படம் வெளியான பிறகு ரஜினி அந்த படத்தை பார்த்துள்ளார். தேவா இசையமைத்த பிறகு அந்த படம் வேறு மாதிரி இருந்துள்ளது. இதுக்குறித்து ரஜினி ஒரு பேட்டியில் கூறும்போது படத்தின் 50 சதவீத வெற்றிக்கு நாங்கள் காரணம் என்றால் 50 சதவீதம் தேவாதான் காரணம் என கூறியிருந்தார்.

To Top