Tamil Cinema News
வெளிநாட்டு உரிமம் மட்டும் இத்தனை கோடியா? மாஸ் காட்டிய கூலி திரைப்படம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருக்கவே செய்கிறது. அந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி.
இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அதற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார்.
இவர்கள் கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது என்றதுமே தயாரிப்பு நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு வந்து நின்றன. ஏனெனில் இந்த படம் எப்படியான ஒரு வசூலை கொடுக்கும் என்பது பலருமே அறிந்த விஷயம்தான்.
இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே பயங்கரமாக பிசினஸ் ஆகி வருகிறது கூலி திரைப்படம். ஓ.டி.டி, சாட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமங்களை தற்சமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
அந்த வகையில் தற்சமயம் வெளிநாட்டு உரிமம் மட்டுமே 81 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
