தேவையில்லாமல் வாயை விட்ட லாரன்ஸ்.. கடுப்பபாகி வாய்ப்பை மறுத்த ரஜினி!.. இது வேற நடந்துச்சா!..

Rajinikanth and Raghava Lawarance: கருப்பான நடிகர் கூட தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பெரும் உயரத்தை அடைய துவங்கியப்போதுதான் கதாநாயகன் ஆவதற்கு உருவம் தேவையில்லை. நடிப்புதான் முக்கியம் என்பதை நடிகர்கள் புரிந்துக்கொண்டனர்.

ரஜினி பெரும் நடிகரான பிறகு பல திரைத்துறை ஊழியர்களுக்கு உதவிகளை செய்துள்ளார். அப்படி உதவி பெற்றவரில் நடிகர் லாரன்ஸும் முக்கியமானவர். சினிமாவில் நடன கலைஞர்கள் குழுவில் லாரன்ஸை சேர்த்து விட்டதே ரஜினிதான் என்று கூறப்படுகிறது.

Social Media Bar

ராகவா லாரன்ஸிற்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் அவரே வாயை விட்டு அந்த வாய்ப்பை கெடுத்துக்கொண்டார் என்று பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது ரஜினிகாந்திடம் தொடர்ந்து தன்னுடைய படத்தில் நடிக்குமாறு கேட்டு வந்தார் லாரன்ஸ். அந்த சமயத்தில்தான் லாரன்ஸின் முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் எல்லாம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தன.

எனவே ரஜினியும் லாரன்ஸ் திரைப்படத்தில் நடிக்கலாம் என்றே யோசித்தார். ஆனால் ரஜினிகாந்த் தன்னுடன் நடிக்கும் திரைப்படத்தை நான்தான் தயாரிப்பேன் என கூறியுள்ளார் லாரன்ஸ். என்ன இருந்தாலும் ரஜினியால் உயரத்தை தொட்டவர் லாரன்ஸ்.

அவரிடம் சம்பளத்திற்கு ரஜினிகாந்த் எப்படி வேலை பார்ப்பார். எனவே அதற்கு பிறகு லாரன்ஸோடு நடிக்கும் எண்ணத்தையே கைவிட்டாராம் ரஜினி. லாரன்ஸ் மட்டும் அப்படி சொல்லவில்லை எனில் ரஜினி லாரன்ஸ் காம்போவில் அப்போதே ஒரு படம் வந்திருக்கும்.